Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைமை வைத்த செக்; சரண்டரான திருமா... தொண்டர்கள் அப்செட்!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (12:01 IST)
விழுப்புரம், சிதம்பரம் தவிர வேறு எந்த தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என திமுக தலைமை விதித்த கட்டுப்பாட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அப்செட்டில் உள்ளார்களாம். 
 
அதிமுக கூட்டணியில் அக்கட்சி தலைவர்கள், தங்களது வேனில், வேட்பாளர்கள் மற்றும் அந்த தொகுதியில் உள்ள தங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஏற்றிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 
 
ஆனால், திமுக கூட்டனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக விதித்துள்ள கட்டுபாடுகளால் தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இது குறித்து அக்கட்சி தரப்பில் கூறப்படுவதாவது, 
கூட்டணியில் இருந்தாலும் சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பிரச்சாரத்திற்கு வந்தால், வேறு சமூகத்தினரின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காது என திமுக எண்ணுகிறது. 
 
இதனால், திமுக தரப்பில், விழுப்புரம், சிதம்பரம் என உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளது. 
 
இதையடுத்து திருமாவலவனும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என சில தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்து வருகிறாராம். இதனால், கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments