Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலுவான பாஜக வேட்பாளரை எதிர்த்து முன்னிலையில் பி.ஆர்.நடராஜன்

வலுவான பாஜக வேட்பாளரை எதிர்த்து முன்னிலையில் பி.ஆர்.நடராஜன்
, வியாழன், 23 மே 2019 (18:43 IST)
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி லோக் சபா தேர்தல்  நடைபெற்றது.
கோவையில் மட்டுமே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் வலுவான பாஜக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற உள்ளார். இந்தியா முழுக்க  பாஜக வலுவான இருக்கும் இடங்களில் கம்யூனிஸ்ட் எங்கும் வெற்றிபெறவில்லை.
 
பி.ஆர்.நடராஜன் சிபிஎம் 4,94.623 வாக்குகளும், பாஜக 3,47,240 வாக்குகளும் பெற்றுள்ளன. மநீம 1,34,606 வாக்குகளும், நா.த 54,487 வாக்குகளும், அமமுக 32, 561 வாக்குகளையும் பெற்றுள்ளது.
 
இந்தியாவிலேயே கோவையில் மட்டும் நடராஜன்தான் பாஜக வேட்பாளர் ஒருவரை, அதுவும் வலுவான பாஜக வேட்பாளரை தோல்வி அடைய  செய்து இருக்கிறார். இது பலரும் எதிர்பார்க்காத முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவிலேயே இப்படி ஒரு சாதனை எங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் பரபரப்பு அடங்கி வருகிறது. எனினும் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக முன்னிலை: சோகத்தில் மூழ்கியுள்ள காஷ்மீரின் நிலை என்ன?