Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாக்கு எண்ணிக்கையில் அடிச்சு தூள் கிளப்பிய சன்னி லியோனி!

Advertiesment
Arnab Goswami
, வியாழன், 23 மே 2019 (13:59 IST)
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி படுமும்முரமாக நடைபெற்று வருகிறது . 
 

 
இந்த தேர்தலில் பிரபல நடிகரும், பாஜகவின் நட்சத்திர வேட்பாளருமான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது வாக்கு எண்ணக்கையின் முடிவில் பஞ்சாப் மாநில குருதாஸ்பூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சன்னி தியோல் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 
இந்நிலையில் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதி நிலவரம் குறித்து பேசிய ரீபப்லிக் டிவியின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி சன்னி தியோல் என்று கூறுவதற்கு பதிலாக வாய் தவறி  சன்னி லியோன் என்று தவறாக கூறிவிட்டார்.


 
இந்த விவகாரம் காட்டு தீயாக பரவி பேசப்பட்டு வருவதையடுத்து தற்போது நடிகை சன்னி லியோன் இதுகுறித்து,  “நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளேன்?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவையில் ஜெயித்த ஸ்டாலினால் சட்டமன்றத்தில் ஜெயிக்க முடியாதது ஏன்?