Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக தேர்தலுக்கு அனைத்தும் தயார் – சத்யபிரதா சாஹூ தகவல் !

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:52 IST)
தமிழகத்தில் இன்னும் 7 நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்கட்டமாக இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையடுத்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ‘ தமிழகத்தில் நடைபெற இருக்கும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளன. தேர்தலுக்குத் தேவையான 1,50,302 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 89,160 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் , 94,653 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து விரைவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனைத்துத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments