குருவுக்கே துரோகம் செய்தவர் மோடி – ராகுல் குற்றச்சாட்டு !

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (09:02 IST)
மகாராஷ்ட்ராவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி மோடி தனது குருவான அத்வானிக்கு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

கடந்த் மார்ச் 21 ஆம் தேதி  பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 20 மாநிலங்களில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி வழக்கமாகப் போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியில் இம்முறை பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்வானிக்கு இந்த தேர்தலில் சீட் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனக் கூறப்பட்டது. இதற்குக் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது பாஜக உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகச் கூறப்பட்டது. இது பாஜக கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பாஜக முன்னனித் தலைவரை அவமதித்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து மகாராஷ்ட்ராவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ‘ இந்து மதத்தில் குருதான் முதன்மையானவர். இந்துத்துவம் குறித்து பேசும் மோடி தனது குருவான அத்வானிக்கு துரோகம் செய்துள்ளார். இதுதான் உங்கள் கலாச்சாரமா ?... இப்போது நடக்க இருக்கும் தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிரிவினை  ஆகிய பாஜகவின் கொள்கைகளுக்கும் அன்பு, நல்லிணக்க சித்தாந்தம் ஆகிய காங்கிரஸின் கொள்கைகளுக்கும் நடக்கும் தேர்தல். இதில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments