போயிங் நிறுவனத்தின் 737 ரக விமானத்தின் தயாரிப்பு குறைப்பு

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (08:52 IST)

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான 737 ரக விமானத்தின் உற்பத்தி தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
 

நடந்து வரும் ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து 737 ரக விமானத்தின் தயாரிப்பு இலக்கு மாதத்துக்கு 52லிருந்து 42ஆக குறைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த உலகின் இரண்டு மிகப் பெரிய பயணிகள் விமான விபத்துகளோடு தொடர்புடைய இந்நிறுவனத்தின் 737 மாக்ஸ் ரக விமானத்தின் ஆர்டர்களை பெறுவதற்கு பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். அதே போன்று கடந்த அக்டோபர் மாதம் 'லயன் ஏர்' விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவேறு விபத்துகளுக்கும் போயிங் நிறுவனத்தின் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணமென்று தொடக்க கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments