வயநாட்டில் ராகுல் மனுத்தாக்கல் – மக்கள் உற்சாக வரவேற்பு !

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:44 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மற்றொரு தொகுதி என்ற கேள்விக்குப் பல தொகுதிகள் யூகங்களாக சொல்லப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் கூட அவர் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கேரள மாநிலம் வயநாட்டில் அவர் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் அவர் இன்று மனுத்தாக்கல்  செய்துள்ளார். நேற்று இரவு கேரளா வந்த் அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டரில் வயநாடு வந்தார். கல்பாத்தியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் இருந்தார். கேரளாவில் மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments