Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அச்சாதீன் கேள்விக்கு ஸ்கர்ட் பதில் – எல்லை மீறும் பாஜகவினர் !

அச்சாதீன் கேள்விக்கு ஸ்கர்ட் பதில் – எல்லை மீறும் பாஜகவினர் !
, வியாழன், 4 ஏப்ரல் 2019 (10:19 IST)
காங்கிரஸின் பிரியங்கா காந்தி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பாஜ்க நிர்வாகி ஒருவர் பிரியங்கா காந்தியின் உடை விஷயத்தைப் பற்றி சர்ச்சையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தியின் மகளும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச்செய்லாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பாஜகவையும் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசும் போது அச்சாதீன் ( நல்ல நாள் – மோடியின் தேர்தல் பரப்புரைகளில் கூறப்பட்டது ) இன்னும் வரவில்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உ.பி. பாஜ்க பிரமுகர் ஒருவரான ஜெயகரன் குப்தா பேசியபோது ‘காங்கிரஸ் தலைவர் ஒருவர், நல்ல நாள் வந்துவிட்டதா எனக் கேட்கிறார். ஸ்கர்ட் அணிந்தவர்கள் எல்லாம் புடவை கட்டிக் கொண்டு கோயிலுக்குள் சென்றால் எப்படி நல்ல காலம் வரும். கங்கையைப் புனித நதியாக மதிக்காதவர்கள் இப்போது அங்கே சென்று பிரச்சாரம் செய்கின்றனர்’ எனக் கூறினர்.

அவரின் இந்தப்பேச்சுக்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதனையடுத்து அவர் தான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை எனக் கூறினார். பாஜக நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலர் இதுபோல அநாகரிகமாக பேசிவிட்டு பின்னர் கண்டனங்கள் எழும்போது பல்டி அடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கால் 8 வருடங்களுக்கு பின் தாயிடம் சேர்ந்த மகன்