ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ரம் இன்று தீர்ப்பளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இப்போது வெளியாகும் இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பிரான்சிடமிருந்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி மீதும் பாஜக மீதும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடு நடக்கவில்லை என, தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ரபேல் வழக்கில், மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், ராணுவ அமைச்சக அலுவலகத்தில் இருந்து திருடி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ர குற்றாச்சாட்டும் இருக்கும் நிலையில், இந்த ஆவணங்களை ஆதாரமாக ஏற்கலாமா என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும்.
அப்படி இந்த ஆதரங்களை ஆவணங்களாக ஏற்கலாம் என தீர்ப்பு வெளியானால் அது மோடிக்கு அவரது ஆட்சிக்கும் நெருக்கடியை கொடுக்கும். 20 மாநிலங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.