பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா – டிவிட்டரில் மோடி நன்றி !

செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (11:35 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பாஜகவுக்கு தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ஜடேஜா மோடியின் மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ரிவாபா ஜடேஜா கடந்த மாதம் 3ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அதையடுத்து ஒரு சில நாட்கள் இடைவெளியில் ஜடேஜாவின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் ஜடேஜாவின் ஆதரவு யார்க்கு என்பதில் கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ரவிந்தர ஜடேஜா தனது ஆதரவு பாஜகவிற்கே என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதையடுத்து டிவிட்டரில் நன்றி தெரிவித்த மோடி ஜடேஜா உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சவால்விட்ட லாரன்ஸிடம் சரணடைந்த சீமான்! அடேங்கப்பா என்ன ஒரு அந்தர் பல்டி!