தேர்தலை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட டூடுல் !

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:31 IST)
இந்தியாவில் முதல்கட்டமாகத் தொடங்கியுள்ள மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தங்கள் பக்கத்தில் டூடுல் ஒன்ற வெளியிட்டுள்ளது.

இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்கட்டமாக இன்று ஆந்திரப் பிரதேசம் - 25, அருணாசலப் பிரதேசம் - 2, பிகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு காஷ்மீர் - 2, மகாராஷ்டிரம் - 7, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, அசாம் - 5, ஒடிசா - 4, சிக்கிம் - 1, தெலங்கானா - 17, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தராகண்ட் - 5, மேற்கு வங்காளம் - 2, அந்தமான் நிக்கோபார் - 1, லட்சத்தீவு - 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகிறது. சில இடங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்று தொடங்கியுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தங்கள் டூடுலை வெளியிட்டுள்ளது.

தங்கள் பக்கத்தில் ஓட்டுப்போட்டு விட்டு மையுடன் இருக்கும் விரலோடு இருக்கும் டூடுல் வெளியாகியுள்ளய்து. இன்று முழுவதும் இந்த டூடுல் கூகுள் பக்கத்தில் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments