Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவின் போது வெடித்தது வன்முறை : ஒருவர் கொலை

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:25 IST)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு  பிரசாரம் மேற்கொண்டனர். வட - தென்னிந்தியாவில் சில இடங்களில் பிரசாரம் முடிந்ததை அடுத்து   இன்று சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆந்திராவில் தெலுங்குதேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் தெலுங்குதேசம் கட்சி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார்.
முதற்கட்ட மக்களவை தேர்தலில் சுமார் 14.22 கோடி வக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
 
91 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
91 தொகுதிகளில் 1.70 லட்சத்திற்கும் மேலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
பலத்த பாதுகாப்புடன் 20 தொகுதிகளில் 91 மக்களவை  தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
 
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.பின்னர் போலீஸார் இருதரப்பினரையும்  விலக்கினர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
தற்போது தெலுங்குதேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் காரணமாக தெலுங்குதேசம் கட்சி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார்.அவர் பெயர் பாஸ்கர் ரெட்டி என்று தகவல் வெளியாகிறது.
 
ஆந்திராவில் உள்ள அனந்தபூர் அருகே தாடிபத்ரியில் ஏற்பட்ட மோதலில் இந்தக்கொலை நடந்ததாகக் கூறப்படுக்கிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments