தேவை ஒரு விரல் புரட்சி ! இது தேர்தல் காலம் !

வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:03 IST)
தேவை ஒரு விரல் புரட்சி ! இது தேர்தல் காலம் !
 
உலகின் மிகப்பெரும் ஜன நாயகத் திருவிழா தொடங்கி விட்டது. இங்கு ஜனநாயகத்தின் நிலைப்போல் கவலையும் துயரமும் தரக் கூடியது ஏதும் இல்லை.
 
இங்கு ஊர்ரெல்லாம் பிரச்சாரங்கள் !
இங்கு தெருவெல்லாம் மக்களின் ஏங்கங்கள் !
இங்கு ஆர்த்தி தட்டுகள் காத்துக் கிடக்கிறது !
இங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஜனநாயகம் தெரியவில்லை
பணநாயகம் மட்டும் தெரியகின்றது !
 
இங்கு ஜனநாயகத்தின் கைகள் கட்டப்படும் போது குற்றவாளிகள் கைகள் அவிழ்க்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் நம்பிக்கை தகர்த்து எறியப்படுகிறது. இங்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கஷ்டத்தில் உள்ளது.
 
வழக்கம் போல் என் தலையை வெட்டி தனியாக வைத்தாலும் !
அப்போதும் சொல்வேன் ! நான் இந்த கட்சி ! இந்த சின்னம் !
என்று சராசரி தொண்டர்கள் மட்டும் உற்சாகமாய்
 
உளறிக் கொட்டும் வேட்பாளர்களும், அவர்களின் பிரதிநிதிகளும்,
இங்கு தெருக்கூத்து ஆகிவிட்டது ஜனநாயகம் !
 
நாங்கள் ஜெயித்தால் இனி தேர்தல்கள் இல்லை என்று ஒரு குரல் !
வாக்கு சாவடிகளை கைப்பற்றுவோம் என்று ஒரு குரல் !
இங்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது ஜனநாயகம் !
 
பணம் வேண்டாம் !
மதம் வேண்டாம் !
நிறங்கள் வேண்டாம் !
 
ஒரு விரல் புரட்சியால் ஜனநாயகம் காப்போம் !


இரா காஜா பந்தா நவாஸ்

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் என்ன ஆச்சு குஷ்புவுக்கு? ஏன் அப்படி செய்தார்? வைரலாகும் வீடியோ!!!