Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்சைக்குரிய பேச்சு : அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப் பதிய உத்தரவு

சர்சைக்குரிய பேச்சு : அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப் பதிய உத்தரவு
, சனி, 6 ஏப்ரல் 2019 (13:04 IST)
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்யப்பட்டது. வக்குச்சாவடியில் நம்ம தான் இருப்போம். அப்புறம் என்ன புரியுதா? என்று தொண்டர்களைப் பார்த்து அன்புமணி ராமதாஸ் மேடையில் இருந்தபடி பேசியுள்ளது பரப்பை ஏற்படுத்தியது. அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யா திருப்போரில் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தற்போது அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரில் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும் என அன்புமணி பேசியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்தது.
 
வாக்குச்சாவடியை கைப்பற்றத் தூண்டும் வகையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
 
அன்புமணி பரப்புரையின் போது பேசியதாவது:
 
திருபோரூரில் அதிமுக மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதா வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது தேர்தலின் போது வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும்? என்று பேசினார்.இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
 
மாற்றம் முன்னேற்றம் என்று அன்று பேசிய அன்புமணி ராமதாஸ் இன்று ஆளும் அரசுடன் பாமக கூட்டணி உறவு வைத்துள்ளது என்பதற்காக பொதுமேடையில் அநாகரிமாக வன்முறையைத் தூண்டும்  முறையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
 
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நடைபெற   இருக்கிற மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளது. இந்நேரத்தில் தவளை வாயால் மாட்டிக் கொண்ட மாதிரி அன்புமணி ராமதாஸ் நேற்று திருபோரில் நடைபெற்ற பரப்புரையில்  சர்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இதற்கு திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது.
 
இந்நிலையில் அன்புமணி நேற்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரில் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.ஆர் க்காக கேப்டன் போட்ட டிவீட்: தேம்பி துடிக்கும் ரசிகர்கள்...