Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனியாவை எதிர்த்து பலமான வேட்பாளர்! ரேபேலியில் யாருக்கு வெற்றி?

சோனியாவை எதிர்த்து பலமான வேட்பாளர்! ரேபேலியில் யாருக்கு வெற்றி?
, வியாழன், 4 ஏப்ரல் 2019 (07:50 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய உபி மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் போட்டியிடுவது தெரிந்ததே. இந்த தொகுதியில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கு மற்றும் பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் காரணமாக சோனியா காந்தி மிக எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நிலையில் தற்போது சோனியாவுக்கு எதிராக ரேபேலியில் பாஜக பலமான வேட்பாளரை நிறுத்தியுள்ளது
 
ரேபேலி தொகுதியில் உள்ளூர் மக்களிடம் பிரபலமான தினேஷ் பிரதாப்சிங் என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் காங்கிரஸ் மேல்சபை உறுப்பினரான தினேஷ் பிரதாப் சிங், தொகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்றவர். காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் ரேபேலி, இவரது போட்டியால் ஆட்டம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தன்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். பொதுமக்கள் இவருக்கு அமோக ஆதரவு தந்து கொண்டிருப்பதால் சோனியா தனது வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டும் என்று அந்த தொகுதியில் களத்தில் இருக்கும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
 
webdunia
அதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக போஜ்புரியின் பிரபல பாடகரான நிருஹா என்றழைக்கப்படும் தினேஷ்லால் யாதவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவருடைய பாடல்கள் என்றால் உபி மக்களுக்கு உயிர் என்பதால் இவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. முக்கிய பிரமுகர்களை வேட்பாளர்களாக களமிறக்கும் பாஜகவின் உத்திக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் வெற்றியைத் தடுப்பேன்: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ ஆவேசம்