Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்

மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்
, வியாழன், 23 மே 2019 (11:52 IST)
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம்தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும் தனியார் ஊடங்களும்  தேர்தலுக்கு பிந்தைய தங்களின் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

இந்த 2019 பராளுமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக உள்ளது. வெற்றி யாருக்கு? இன்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது இந்திய தேசிய காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்குமா? என  தெரியவரும். இந்த 2019 பராளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள அரசியல் கட்சிகளுடன் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருக்கின்றனர்.

மக்களவை தேர்தல் நிலவரம்:
கட்சிகள் நிலவரம்
கூட்டணி 345
காங்கிரஸ் கூட்டணி 92
மற்றவை 105

தமிழக நிலவரம்:
கட்சிகள் முன்னிலை
அதிமுக கூட்டணி 1
திமுக கூட்டணி 38
மற்றவை 0

தமிழக இடைத்தேர்தல் நிலவரம்:
கட்சிகள் நிலவரம்
அதிமுக 9
திமுக 13
அமமுக 0

2019 மக்களவை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் உங்களுக்காக.......

நாடு முழுவதும் பாஜக 325 இடங்களில் முன்ன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
 
தமிழகம் புதுச்சேரியி திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் முன்னிலை.
 
தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக 11 இடங்களில், திமுக 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 59048வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
 
ஒடிஷா - பிஜேடி 15, பாஜக 6 இடங்களிலும், பஞ்சாப் - பாஜக 3, ஆம் ஆத்மி 1, காங்கிரஸ் 9 இடங்களிலும், சண்டிகர் - பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
 
உத்தரகாண்ட் - பாஜக 5, அருணாச்சலபிரதேசம் - பாஜக 2, ஹரியானா - பாஜக 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
 
அசாம் - பாஜக 10, காங்கிரஸ் 2, மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
 
ஜார்க்கண்ட் - பாஜக 9, காங்கிரஸ் 4, மற்றவை 1 இடங்களிலும் உள்ளது.
 
பஞ்சாப் - காங்கிரஸ் 8, பாஜக 4, ஆம் ஆத்மி 1 இடங்களிலும் உள்ளது.
 
 
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் 13 000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
 
தமிழகம் - புதுவை மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.
 
நாடு முழுவதும் பாஜக 323 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 107 தொகுதிகளில் முன்னிலை
 
தருமபுரி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக கட்சி அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளர் எஸ் செந்தில்குமாரை விட 13000 வாக்குகள் குறைவாகப்பெற்றுள்ளார்.
 
ஜார்கண்ட் மாநில மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது
 
உத்தரபிரதேசம் மக்களவைத் தொகுதியில் 56, பகுஜன் சமாஜ் 24 காங்கிரஸ் 1  தொகுதிகளில்ம் முன்னிலை
 
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் முன்னிலை
 
மஹாராஸ்டிர மாநில மக்களவைத் தொகுதியில் பாஜக 44, காங்கிரஸ் 3, மற்றவை 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
 
மேற்கு வங்க மக்களவைத் தொகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 25, பாஜக 16, காங்கிரஸ் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
 
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நாகை, கடலூர், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி முன்னிலை
 
ஆந்திர சட்டப்பேரவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 142 தொகுதிகளில், தெலுங்குதேசம் 28 தொகுதிகளில் முன்னிலை
 
குஜராத் மாநில மக்களவைத் தொகுதியில் பாஜக 26, காங்கிரஸ் 0, மற்றவை 0 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
 
ஆந்திரபிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளிலும், தெலுங்குதேசம் 1, மற்றவை 0 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
 
கேரளாவில் காங்கிரஸ் 19, இடதுசாரி 1, பாஜக 0 இடங்களில் முன்னிலை.

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 12 ; அதிமுக 10 இடங்களில் சரிசமமாக முன்னிலை வகிக்கிறது.
 
ஆந்திர சட்டப்பேரவை தேர்தல் தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி 142 இடங்களில் முன்னிலை  
 
நாடு முழுவதும் பாஜக 327, காங்கிரஸ் 104, மற்றவை 111 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
  
தமிழக மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3இடங்களிலும் முன்னணி வகிக்கிறார்கள்
 
ஒடிசா சட்டப்பேரவை நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் 78 தொகுதிகளில் முன்னிலை.

ஒடிஷா சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் 5 வது முறையாக ஆட்சியை பிடிக்கிறது.
 
பெரம்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் இருந்து  செய்தியாளர்கள் வெளியேற்றம். 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தத்தை தொடர்ந்து அதிமுக கட்சியினர் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
 
தர்மபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணியை பின்னுக்குத் தள்ளி திமுக கட்சியின்  எஸ் செந்தில்குமார் முன்னிலை
 
பாஜக முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து ஆட்சிமன்றக்குழு கூட்டம் இன்று மாலை 5:30 மணிகு டெல்லியில் நடைபெறுகிறது.
 
நாடு முழுவதும் பாஜக 336 தொகுதிகளிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும் மற்றவை 113 இடங்களிலும் முன்னிலை 
 
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 88 427 வாக்குகள் பெற்று முன்னிலை. 

அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகளில் திமுக தேசிய அளவில் 5-வது இடத்தில் உள்ளது.
 
தமிழகம் புதுச்சேரியில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
 
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம்.
 
தேசிய அளவில் கம்யூ. கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை: அவற்றில் 4 தொகுதிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
 
ஆந்திரா சட்டமன்றத் தேர்தல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 149, தெலுங்கு தேசம் 25 தொகுதிகளில் முன்னிலை.
 
தேர்தல் முடிவு: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார்.
 
சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் முடிவு.

ஆந்திரா மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்.
 
ஆந்திராவில் சிரஞ்சீவியின் தம்பியான பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் முன்னிலை.
 
நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, ஆரணி, அரக்கோணம், மதுரை, தென்காசியிலும் முன்னிலை.
 
சூலூர், ஆண்டிபட்டி, விளாத்திகுளம், மானாமதுரை, நிலக்கோட்டை பேரவை தொகுதியில் அதிமுக முன்னிலை.

எம்.பி. தேர்தல் - 3 இடங்களில் கூட்டணி முன்னிலை.
 
சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என 9 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக முன்னிலை.
 
ஒய்எஸ்ஆர். ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார்.

பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் வாழ்த்து.
 
கன்னியாகுமரி, நாகை, கடலூர், திருப்பூர் மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை.
 
வடசென்னை வாக்கு இயந்திரத்தை பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டுவந்ததாக புகார்.
 
என்ஆர் காங்கிரசின் நெடுஞ்செழியனை (9,031) விட வெங்கடேசன் (10,498) 1,461 வாக்குகள் முன்னிலை.
 
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவு.
 
பாஜக முன்னிலை: பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.
 
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 298 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
 
2வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள்: முதல்வர்.

இந்தியா-இஸ்ரேல் இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு.
 
சிதம்பரத்தில் மக்கலவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை.
 
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற 55 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும்.
 
மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திரமோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். மக்களவை தேர்தல் நீங்கள் சாதித்து விட்டீர்கள்; கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்: நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து
 
பாரதிய ஜனதா கட்சி தனித்து 301 தொகுதிகளிலும், காங்கிரஸ் தனித்து 50 தொகுதிகளிலும் முன்னிலை

2வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து: விஜயகாந்த்
 
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை விட பாஜகவின் ஸ்மிருதி இரானி 11,226 வாக்கு முன்னிலை
 
தருமபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணிக்கு பின்னடைவு

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜாவை விட 37,816 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் வில்வநாதன்.
 
அன்புமணியை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் 19,209 வாக்குகள் முன்னிலை.
 
தேர்தலில் முன்னிலை: நாட்டு மக்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நன்றி.

அன்புமணியை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் 21,621 வாக்குகள் முன்னிலை
 
26-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் நரேந்திர மோடி
 
பெங்களூரு இல்லத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவ கவுடா, முதல்வர் குமாரசாமி ஆலோசனை
 
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், யூடான் மன்னர் வழ்த்து
 
இந்தியா மீண்டும் வென்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து; ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்
 
நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 1,94,852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகம்
 
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 3,11,595 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்
 
சுமார் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதியின் ஷாலினி யாதவை தோற்கடித்தார்
 
வடசென்னை மக்களவை தொகுதியின் 4-ஆம் சுற்றில் மீண்டும் பெட்டி மாறியதாக வேட்பாளர்கள் புகார்
 
மக்களவை தேர்தலில் தோற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் அல்ல: மே.வங்க முதல்வர் மம்தா

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
 
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு கட்சியின் தலைவர் அமித்ஷா வருகை
 
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். காத்தவராயன் வெற்றி முகம்
 
தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் திகும வேட்பாலர் இதயவர்மன் வெற்றி முகம்
 
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி முகம்
 
நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள் காங். தலைவர் ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி: ஸ்டாலின்
 
கர்நாடக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
 
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும் ஜனநாயக முறைப்படி பிரதமர் மோடி ஆட்சியை நடத்துவார் என நம்புகிறோம் என கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
 
ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு கட்சியின் காரியக் குழுவே முடிவெடுக்கும் என ராகுல்காந்தி பதில்
 
தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா என கேட்டதற்கு பதில்
 
 
 
 
 
 
 
 
 
 



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: மண்ணை கவ்விய சந்திரபாபு நாயுடு