அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் ஜானகிராமன் என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்குசேகரிப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 36-வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.