Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

இன்றைய உண்மையான நட்பு - சினோஜ் கட்டுரைகள்

Advertiesment
இன்றைய உண்மையான நட்பு - சினோஜ் கட்டுரைகள்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (23:12 IST)
ஒருவரின் வாழ்கையில் எந்த உறவுமுறைகளும் வேண்டுமானாலும் இல்லாமல் இருக்கலாம் ஆனால், நட்பென்ற ஒரு பந்தம்  நிச்சயம் இருந்தே தீரும்!

வாழும் வாழ்க்கைக்கு குடும்பம் எப்படி முக்கியமானதோ அப்படியே இந்த வாழ்க்கையில், மனிதனுக்கு நட்பு என்பது மிக முக்கியமானது.

ஒரு நண்பருக்கான இறப்பது சிரமம் அல்ல. ஆனால், நாம் இறப்பதற்குத்  தகுதியான  நபரைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம் என்று பிரபல எழுத்தாளார் மார்ட்க் டிவைன் கூறியது போல், நமக்கான துக்கத்தின் போது,  நம் தோளைத் தட்டிக் கொடுத்து, நமக்கொரு நம்பிக்கை கொடுத்து,  பக்கத்தில் இருந்து மனதை இளைப்பார ஒரு சந்தோஷத் தருணத்திற்கு, தன் வார்தைகளின் மூலம் அழைத்துச் செல்பவன் தான் உண்மையான நண்பன்.

ஒரு நாளின் மாலைப்பொழுதில் தெருமுக்கில் கூடி, நான்கு பேரைக் கிண்டல் செய்து, அந்த நாளையும் அடுத்த நாளையும் எப்படிப் பொழுதுபோக்குவது என்று கூறிச் சிரித்து மகிழ்வதற்குப் பெயர் நட்பல்ல. அது தானும் கெட்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் கெடுத்துவிடும் போக்காகும்.

நிலையாமை உணரும் தருணத்திலும்கூட,  தனக்காக ஒருவன் துணையிருக்கிறான் என்று உணர்கிற உறவாக இந்த நட்பு  இருக்கும்போது, எந்த  நிலையில் இருந்தாலும் நம்மால் மீள முடியும்!

அப்படிப்பட்ட உண்மையான நட்பை நாம் சிறந்த நண்பராக இருப்பதன் மூலம்தான் பெற முடியும்!
webdunia

இந்த நட்புக்குச் செல்வம், கல்வி போன்ற எதுவும் தேவையில்ல, உள்ளத்தில் உண்மையும், இயேசு, உன்னைப் போல் பிறரை நேசி என்பது மாதிரி, நம்முடைய வேறொரு உருவின் பிரதியாக  நண்பரைக் காண்கின்ற போது, எப்படி அங்கு துரோக முடிவுகள் உருவாகும்?

நாலாபக்கமும் எதிரிகள் சூழ்ந்திருக்கும் போதும் தன் தன்னம்பிக்கை இழக்காமல் இறுதி மூச்சிருக்கும் வரை தொடந்து போராடிக் கொண்டிருக்கும்  ஒரு போர் வீரனைப் போன்று, உள்ளம் உறுதியானவருக்கும் எதாவது ஒரு சமயம் துன்பக் காற்று வந்து வீசலாம், ஏமாற்றத்தின் பிசிறுகள் அடிக்கலாம். தோல்விச் சிலுவைகள் சுகம்மும் வாய்ப்பு நேரலாம்,. அப்போதெல்லாம் நம்  நிலையை  விளங்கிக் கொண்டு, மீண்டும் புத்தெழுச்சியுடன் போரார ஒரு சிறு வார்த்தையென்ற பொறி நம் மூளைக்குள், மனதிற்குள்ளும் பாய்ச்சிட  ஒரு நல்ல நண்பர் இருந்தால் போதும் இந்த உலகையே புறட்டிப் போடுகின்ற வல்லமை  நமக்குள் குடியேறியும் அந்த ஒரு நொடியில்.

செல்வம் உள்ள போது மட்டும் பழகுதல் என்பது வியாபாரம்! தேவைகள் நிறைவேறும் வரை மட்டுமே ஒட்டிக் கொண்டிருப்பது, ஒட்டுண்ணிகளுக்குச் சமானம்!

எதுவும் இல்லாத  நிலையில், ஏதும் செய்ய முடியா  சமயத்திலும், எல்லாம் இழந்த பின்னும் தனக்கான   நம்பிக்கை நூலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவனுக்கு, வெற்றித்தோள் கொடுக்கக்கூட இந்த நட்புக் கரம் தேவைப்படுகிறது.
 நட்பு இல்லாத உலகம் என்பது சூரியனில்லாத உலகம்! நிலவு இல்லாத வானம்; மீன் கள் இல்லாத கடல், உயிர்களில்லாத பூமிக்குச் சமம்!

நட்பிற்கு எல்லை என்றாலும், இந்த நட்பின் அளவைத் தெரிந்து கொண்டவர்களுக்கு ஒரு போதும் அதை விட்டுவிடவும், பாதியில் கெட்டுவிடவும், துணியவில்லை.

வெளிச்சத்தில் தனியாக நடப்பதைக் காட்டிலும் இருட்டிலும் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்து என்றுஹெலன் கெல்லர் கூறியது உண்மைதான்!

எதிர்களுக்கு நம்மை வீழ்த்தத் துடிப்பர். துரோக்களுக்கு  நம் பலமும் பலவீனமும் தெரியும்! ஆனால், நண்பனுக்கு  பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என்று தெரியும்!

உண்மை நண்பர் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு நம்மை உயர்திக் கொண்டு செல்லுவார். அது, அருகருகே படிகள் கொண்ட ஏணி, ஒரு போதும் நம்மை உயரத்திற்குக் கூட்டிச் செல்ல சிரமம் ஏற்படுத்துவதில்லை.

இந்த வாழ்க்கையில் பலர் நம்மைக் கடந்து சென்றாலும், உண்மையான நட்பு ததான் இதயத்தில் காலடித்தடத்தைப் பதித்துச் செல்வர் என்று எலினோர் ரூஸ்வெல்ட் கூறியதுபோல் நமக்கான ஒரு நட்பை சந்தித்து,அவர்களின் ஆத்மார்த்தமான நட்புறவை பெருக்கிக் கொண்டு போவது எத்தனை முக்கியமானது என்பதை நாம் அறிய வேண்டும்!

நாம் நேர்மையாக இருப்பதனாலும் கூட சில சமயம் நிறைய நண்பர்கள் நமக்குக் கிடைக்காமல் போகலாம்! ஆனால் சரியான நபர்களை நமக்குப் பெற்றுத்தரும்! என்று ஜான் லேலான் கூறியததைப் போல் அவசரப்படாமல், காதலைப் போன்று உண்மையான நட்புக்குக் காத்திருந்தலின் மகத்துவம் புரியும்!

அது ஒருபோதும் குற்றம்காணாது; குறைகளை எல்லாம் நிறைவாக்கும்  சக்தி அந்த நட்புக்கு மாத்திரமே உண்டு.!

ஏனென்றால், ஒரு விசுவாசமான நண்பர் பத்தாயிரம் உறவினர்களின் மதிப்புமிக்கவர் என்று யூரிபிட்ஸ் கூறினார்.

என் நண்பர்களே என் சொத்து என்றார் நாவலாசிரியர் எமிலி டிக்சென்சன். ஒரு நல்ல நட்பின் ஆழம் என்பது பழக்கத்தின் அளவைப் பொறுத்தல்ல என்றார் ரவீந்தர நாத் தாக்கூர்.

இந்த நட்பை பெறுவதற்கு முன் ஆயிரம் முறைகூட யோசிக்கலாம் ஆனால், ஒருமுறை நட்பில் கலந்துவிட்ட பின் ஒருமுறைகூட யோசிக்கக்கூடாது.

அதுவே நட்பு ஆழவேர்விட்டுச் செழித்து வளர்வதற்கான அர்த்தமாகும்!.

அதனால், நமக்கு எல்லாமுமாக உள்ள இந்த நட்பைப் போற்றுவோம்! அது நம்மை வழி நடத்தும், வாழ்விலும் உயர்த்தும்!

தொடரும் 

மீண்டும் சந்திப்போம்

 #சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகப்பரு வராமல் தடுப்பது எப்படி?