Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானை சிலையின் கீழ் சிக்கிக் கொண்ட பக்தர்! வைரலாகும் வீடியோ

Advertiesment
GUJARATH
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (19:08 IST)
குஜராத் மாநிலத்தில், பக்தர் ஒருவர் சிலையின் அடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கோயிலுக்குச் செல்வதும், அங்குள்ள சுவாமி சிலைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவற்றை வணங்குவதும் இயல்பான ஒன்று.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர், ஆர்வ மிகுதியால் அங்குள்ள யானை சிலை ஒன்றிற்கு கீழே புகுந்துள்ளார்.

ஆனால், அது விபரீதத்தில் முடியும் என அவருக்குத் தெரியவில்லை. இந்த நிலையில், யானை சிலையின் குறுகிய பகுதிக்குள் புகுந்த அவர் அதில் சிக்கிக் கொண்டார்., கீழேயும் வரமுடியவில்லை. மேலேயும் வரமுடியவில்லை.

இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்