Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’12 மணிநேரம்’’ வேலைநேரத்தை அதிகரிக்கத் திட்டம்…?

’’12 மணிநேரம்’’ வேலைநேரத்தை அதிகரிக்கத் திட்டம்…?
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (23:12 IST)
மத்திய தொழில்துறை அமைச்சகம் எட்டுமணிநேர வேலைநேரத்திலிருந்து 12மணிநேர வேலைநேரமாக்க பரிந்துரைந்துள்ளதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகிறது.

ஏற்கனவே ஊதியக்குறைவால் அவதிப்பட்டு உடலுழைப்பால் நைந்து நைந்துகொண்டிருக்கும் ஏழைத்தொழிலாளர்கள் கூலிபெரும் பாட்டாளிகளுக்கு இந்தச் செய்தி எப்படி மனதை ரணமாக்கும் செய்தியாக அமையக்கூடும் என்பதை கம்பெனிகளில் 12 மணிநேரம் கால்வலிக்க நின்றுகொண்டு வேலைபார்த்தால் தெரியும்?
அதுவரை மற்றவர்களின் உழைப்பும் அவர்களின் கஷ்டங்களும் அதிகாரவர்க்கங்களுக்கும் முதலாளித்துவப் பெருச்சாளிகளுக்கும் வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவே தெரியும்.

எத்தனைபோராட்டங்களுக்குப் பிறகு உழைப்பாளர்களுக்குப் பலமணிநேர வேலைநேரத்திலிருந்து 8 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளோம்.
இதுகுறித்து நான் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்:

பிரிட்டனில் ஒருநாள் தொழிலாளர்களின்வேலைநேரம் என்பது 10 முதல் 16மணிநேரம் வரையிருந்தது. இதில் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் அடக்கம்.

எனவே ராபர்ட் ஓவன் என்பவர் கடந்த 1810 ஆம் ஆண்டு ஒரு நாளில் தொழிலாளர்களுக்கான வேலைநேரத்தை  குறைந்தபட்சம் 10 மணிநேரமாகயிருக்க வேண்டுமென முதன்முதலில் கோரிக்கை எழுப்பினார். அதைத் தனதுகொள்கை முழக்கமாக்கி நியூலானார்க்கில் தனது சோசலிச அமைப்பிலும் செயல்படுத்தினார்.

பின்னர், கடந்த 1817 ஆம் ஆண்டு ஒருநாளில் 24 மணிநேரத்தை மூன்றாகப் பிரித்து, பொதுவான வேலைநேரம் என்பது 8 மணிநேரம் ; பொழுதுபோக்கு 8 மணிநேரம்; ஓய்வுக்கான 8 மணிநேரம் என்ற பிரசித்திபெற்ற வாசகத்தையும் உருவாகினார்.
இதையடுத்து,  பிரெஞ்சு தேசத்தில் பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர் அங்குள்ள தொழிலாளர்கள் 12 மணிநேர வேலைநேரத்தை வென்றெடுத்தனர்.
பின், கடந்த 1866 ஆம் ஆண்டு ஜெனிவாவில் சர்வதேசத் தொழிலாளர் சங்கக் கூட்டத்தில்  ஒருநாளில் 8 மணிநேரம் மட்டுமே வேலைநேரம் என்று முன்மொழியப்பட்டது.

இந்தச் செய்தியைப் படித்த அனைத்து உலகத்தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலைவிளக்கேற்றத் தன் வாழ்நாளையே தியாகம் செய்த மாமேதை காரல்மார்க்ஸ், 8 மணிநேர வேலைநேரம் என்பது அனைத்துத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லதென்று தனது டாஸ்காபிட்டல்ஸ் -1867 ( மூலதனம்) எழுதினார்.

இதைப் பெரும்பாலான நாடுகள் முதலில் ஏற்றுக்கொள்ள தயங்கக்காட்டியதென்றாலும் முதன்முதலில் இந்த 8 மணிநேர வேலைநேரத்திட்டத்தை அமுல்படுத்திய நாடு உருகுவே ( 1915)ஆகும். இத்திட்டத்தை அந்நாட்டை அப்போதைய ஆட்சியில் இருந்த ஜோஸ்பாட்லே ஓர்டீஸ் இதை அந்நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

இதன்பின்னர் சர்வதேசத்தொழிலாளர் அமைப்பில் விவாதிக்கப்பட்ட முதல் தலைப்பாக இந்த 8 மணிநேரமாகவே அமைந்தது.

இந்த எட்டுமணிநேரம் வேலைந்நேரம் என்பது பல்வேறு நாடுகளிலும்தலையெடுக்கத் தொடங்கியதன் விளைவாக தொழிலாளர்களின் தினமான மே 1கொண்டாடுவதற்கும் தொடங்கினர் உலகம். அதுவே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

இந்நிலையில் , கடந்த 1919 ஆம் ஆண்டு ஐ.எல்.ஒ மாநாட்டில்தான் ஒருநாளில்; 8 மணிநேர வேலைநேரத்தை கட்டுப்படுத்தும் அமைப்பும் நிறுவப்பட்டது.

மேற்காசிய நாடான ஜப்பானிலும் தொழிலாளர்களுக்கு ஒருநாளில் 8 மணிநேரம் வேலைதிட்டத்தை அங்கீகரித்து அமுலுக்குவந்தது. அதன்படிதான் வாரத்திற்கு சுமார் 40 மணிநேரமும் தினமும் 8 மணிநேரத்திற்கு மேல் தொழிலாளர்களிடம் வேலைவாங்கக்கூடாது எனத் திட்டமியற்றப்பட்டது.

ஏற்கனவே 12 மணிநேரத்திற்கு மேலும்,   12 மணிநேரமாக இருந்த பணிநேரத்தை காரல்மார்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வற்புறுத்தி உலகம் எங்கிலும் 8 மணிநேரமாகக் கொண்டு வந்து பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்தனர்.

இந்நிலையில் சில இடங்களில் 8 மணிநேரம் என்பது ஒரு ஷிப்ட் ஆகவும் கூடுதலாக  4மணிநேரம் வேலை செய்தால் அது அரை ஷிப்ட்டாக கருதப்படும். திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் இந்தவேலை நேரம்  அமலில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநேரத்தை தினமும் 12 மணிநேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரவர்க்கமும் ஆட்சிவர்க்கமும் மறிபரிசீலனை செய்து, உலகத்தொழிலாளர்கலின் விடிவெள்ளி மாமேதை காரல் மார்க்ஸ் சொன்னதுபோல்’’ தொழிலார்களின் உழைப்புச் சக்தியால் அவர்களுக்கு முன்கூட்டிய சோர்வு மற்றும் மரணத்தைத் தள்ளிவைக்கவே இந்த 12 மணிநேரத்திட்டத்தை நாமிணைந்து முறியடிக்க வேண்டும்.  

சினோஜ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து வகையாக கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கும் எண்ணெய் தயாரிப்பு !!