Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறருடன் ஒப்பீடு செய்வது நல்லதா? கெட்டதா?

compare
, சனி, 10 செப்டம்பர் 2022 (22:36 IST)
நம்மைப் பிறருடன் ஒப்பிடும்போதுதான், இங்குப் பிரச்சனைகளுக்குக் கைகால்கள் முளைத்துவிடுகிறது. அடுத்தவரின் சூழல், வாழ்க்கைமுறை, கடந்து வந்த பாதைகளைப் பற்றி நினைக்காமல் எளிதில் குறைகூறுகிறவர்களின் பேச்சைக் கேட்டுத் தடுமாறுகிறவர்களைத் தேற்றுவதற்கான ஊக்கமூட்டும் உற்சாக டானிக் பதிவு இது.
 
நமக்கு யாரும் சொல்லித்தரவில்லை என எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருளெனும் கடலில் மூழ்கியிருப்பதும் இருப்பதும் தவறு;
 
நமக்கு தெரிந்ததைச் செய்யத் துவங்காமல் அடுத்தவர்களின் விமர்ச்சனச் சாட்டைக்குப் பயந்து சாவதும் தவறு;
 
நாமே ஒன்றைச் செய்யும்போது, அதன் ஆரம்பத்திலேயே அது தொழில் நுட்ப- நிபுணத்துவம் வாய்ந்ததாகவும், அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதும் தவறு;
 
நமக்கு ஒன்று தெரிந்தால் அதைச் செய்ய முயற்சிக்கலாமே ஒழிய, எடுத்தவுடன் அதன் இமயமலை உச்சியைத் தொடுவதைப் பார்க்கிலும், அடியெடுத்து வைக்கும் லட்சியப் பயணத்தில், முதலடியில், அருகிலுள்ள குன்றின் நிழல் புதருக்குள் சுருண்டுகிடக்கும் புற்களை மிதிப்பதுகூட வெற்றிதான்.
 
ஏனென்றால் சொந்தக் கால்களால்
 
சுய முயற்சிப் பாதையில் செல்லும்போது, நம்மைக் கீறுகின்ற சிறு முட்கள்கூட நமக்காக வெற்றிப் பரிசுதான்.
நம் தைரிய ரத்தத்தை மதிப்பிட்டு, அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்று நம்மை எடைப்போடுகின்ற ஆசிரியர்தான்.
 
எதிலும் தொடக்கம்தான் முக்கியமே தவிர அதன் முடிவல்ல.
 
ஒரு செயலைத் திரும்ப திரும்ப செய்யும்போது, அதுவே பழக்கமாகிவிடும். நம் வழக்கத்திற்கு அப்பழக்கம் வந்துவிட்டால் அதுவே திறமைக்குச் சுயச்சான்றிதல் அளித்திடும்.
 
இன்னொறு,
 
கட்டெறும்புகூட தன் கால்கள் கொண்டு மலையேறும் ஆனால், காலமெடுத்துக் கொள்ளும். விமானத்தில் ஏறினால் சில நிமிடங்களில் செல்லலாம், ஆனால், அந்த அனுபவமென்பது சில நிமிடங்களுக்கு மட்டும்தான் என்பது நினைவிருக்கப்பட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினந்தோறும் சிறிதளவு தேன் சாப்பிடுதால் என்ன நன்மைகள்....?