Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரத்தம் தெறிக்க வெளியான மோகன்தாஸ் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Advertiesment
இரத்தம் தெறிக்க வெளியான மோகன்தாஸ் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (19:16 IST)
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், நேற்று இன்று நாளை , ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கதாநாயகர்கள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

இதையடுத்து தற்போது FIR என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துவிட்டார். ஆம், விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் "மோகன்தாஸ்" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் வெறித்தனமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ள விஷ்ணுவிஷாலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் வெறித்தனமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முரளி கார்த்திக் இயக்கியிரும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இப்படத்தின் நடிகர் நடிகைகள் டெக்னீஷியன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீசை, தாடியெல்லாம் முளைக்குது... ப்ளீஸ் பியூட்டி பார்லர் ஓபன் பண்ணுங்கப்பா - புலம்பிய VJ பார்வதி!