Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெறிக்கவிடும் லாஸ்லியாவின் "பிரண்ட்ஷிப்" பர்ஸ்ட் லுக்!

Advertiesment
தெறிக்கவிடும் லாஸ்லியாவின்
, வெள்ளி, 5 ஜூன் 2020 (16:33 IST)
முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார்.

"பிரண்ட்ஷிப்"     படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என நேற்றே அதிகாராப்பூர்வ அறிவித்திருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவை திரையில் காண காத்திருக்கும் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் சற்றுமுன் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது. அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் மூவரும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால்  இவர்களுடைய கதாபாத்திரம் யூகிக்கமுடிகிறது, அர்ஜுன் ஸ்டைலிஷான வில்லன் போல் தோற்றமளிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் பயணிகளுக்கு களத்தில் இறங்கி உதவிய வரலக்ஷ்மி சரத்குமார் - வீடியோ