விஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய சமந்தா: காரணம் இதுதான்

வெள்ளி, 6 மார்ச் 2020 (09:01 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தில் இருந்து சமந்தா திடீரென விலகிவிட்டதாக கூறப்படுகிறது சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாகவும், அது மட்டுமின்றி இன்னும் ஓரிரு வருடங்களுக்கு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது 
 
இதனால் சமந்தா ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாய் இருந்தாலும் இன்னொரு பக்கம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தா நடிக்க வேண்டிய நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை பெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
த்ரிஷா நடித்த ‘96’ படத்தின் ரீமேக்கில் சமந்தா நடித்த நிலையில் தற்போது சமந்தா நடிக்கவிருந்த ஒரு கேரக்டரில் த்ரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அஜித் படத்தின் காப்பியா கோப்ரா? பரபரப்பு தகவல்கள்