Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" பட விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நயன்தாராவின்
, செவ்வாய், 3 மார்ச் 2020 (18:14 IST)
நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த ’மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஆர்ஜே பாலாஜி அதிகாரபூர்வமாக அறிவித்தார்
 
இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் வேலுடன் இருக்கும் நயன்தாராவின் பத்தி மயமான புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். அதையடுத்து வெளியான செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் வெளிநாட்டு விநியோக  உரிமையை A&P நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு வருகிற 
மே மாதம் மூக்குத்தி அம்மன் படம் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்ப்பனகை பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!