Publish Date: Thu, 04 May 2017 (14:50 IST)
Updated Date: Thu, 04 May 2017 (14:56 IST)
‘முதலும் கோணல் முற்றிலும் கோணல்’ என்பார்கள். இந்த நடிகைக்கு ஆரம்பம் முதலே அப்படித்தான் இருக்கிறது, பெயரிலேயே கிளவுடைக் கொண்டவர் இந்த நடிகை. அழகாகத் தமிழ் பேசும் இவர், மலையாள முன்னணி நடிகர் ஒருவரின் மகனுக்கு ஜோடியாக தமிழ்ப் படமொன்றில் நடித்தார்.
விஜய் சேதுபதிக்கு பெயரையும், புகழையும் வாங்கித்தந்த படத்தின் இயக்குநர்தான் இந்தப் படத்தையும் இயக்கினார். ஆனால், படம் தயாராகி பல வருடங்கள் ஆகியும், ரிலீஸ் ஆகவில்லை.
அடுத்து, ஸ்டைலிஷ் இயக்குநரின் படத்தில் கமிட்டானார் நடிகை. ஒல்லிப்பிச்சான் நடிகர் தான் நடிகைக்கு ஜோடி. ஆஹா… ரெண்டாவது படத்திலேயே பெரிய இயக்குநர், நடிகர் என்று மகிழ்ந்தார் நடிகை. ஆனால், பாதிக்கும் மேல் ஷூட்டிங் அப்படியே நிற்கிறது. இயக்குநர் வேறொரு படத்தை இயக்குவதில் மும்முரமாகிவிட்டார். வந்த இரண்டு வாய்ப்புகளும் இப்படி அரைகுறையாக இருப்பதால், வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.