Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் பிரபலங்கள் யார்னு தெரியுமா?

கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் பிரபலங்கள் யார்னு தெரியுமா?
, வியாழன், 4 மே 2017 (13:18 IST)
விஜய் டிவிக்காக கமல் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.


 
 
உலக அளவில் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், 15 பிரபலங்கள் 100 நாட்களுக்கு ஒரே வீட்டில் வசிப்பர். அந்த 100 நாட்களுக்கும் அவர்களுக்கு வெளியுலக தொடர்பு எதுவும் இருக்காது. செல்போன், டெலிபோன், பேப்பர், பேனா, நாளிதழ்கள், கடிகாரம் என எதுவுமே அவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. 100 நாட்களையும் அவர்கள் இப்படித்தான் கழிக்க வேண்டும். 100 நாட்களுக்கு யார் இப்படியே வாழ்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள்.
 
இந்த நிகழ்ச்சியை, கமல் தொகுத்து வழங்கப் போகிறார். இதற்காக, சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் பிரம்மாண்டமான வீடு செட் தயாராகி வருகிறது. ஜூன் 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் பார்த்து மகிழலாம்.
 
தகவல்படி, தற்போதைக்கு இரண்டு கிரிக்கெட் வீரர்களும், இரண்டு அரசியல்வாதிகளும் இதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது விஜய் டி.வி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம்பிரபு படத்துடன் வெளியாகும் ‘விவேகம்’ டீஸர்