Publish Date: Wed, 21 Jun 2017 (18:24 IST)
Updated Date: Wed, 21 Jun 2017 (18:32 IST)
தன்னை முதலில் கேட்காததால், பெரிய நம்பர் நடிகை பிகு பண்ணுகிறாராம்.
பிரமாண்ட படத்தின் வெற்றியைப் பார்த்து, அதேபோல் ஒரு படம் எடுக்க ஆயத்தமானார் பூ நடிகையின் கணவர். முன்னணி நடிகர்கள் யாரும் இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொல்லாத நிலையில், இரண்டாம் கட்ட நடிகர்களை வைத்து படத்தை இயக்க முடிவு செய்தார். ஹீரோயினாக, உலக நாயகனின் மூத்த மகள் கமிட்டானார். ஆனால், அவரும் விலகிக்கொள்ள, தற்போது தீவிரமாக ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளது படக்குழு.
பிரமாண்ட படத்தில் நடித்த நடிகையிடம் கேட்க, உடம்பைக் குறைத்த பிறகு நடிப்பேன் என்று சொல்லிவிட்டாராம் அவர். எனவே, பெரிய நம்பர் நடிகையிடம் கேட்டிருக்கிறார்கள். அவருக்கும் அந்தப் படத்தில் நடிக்க ஆசை தானாம். ஆனால், முதலில் தன்னிடம் கேட்காமல் குண்டு நடிகையிடம் கேட்டதில் கொஞ்சம் வருத்தமாம். அதனால், முடிவைச் சொல்லாமல் இழுத்தடிக்கிறார் என்கிறார்கள்.