Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டை தவிர்க்கிறாரா தல?

Advertiesment
Actor ajith
, புதன், 21 ஜூன் 2017 (18:17 IST)
தமிழ்நாட்டில் படம் சம்பந்தமான எந்த விஷயத்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று தவிர்த்து வருகிறார் தல நடிகர் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
தல நடிகரின் படம், இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸாகவிருக்கிறது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு, இந்தப் படத்துக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு. படத்தின் டீஸர், பாடல் எல்லாமே பல கோடி மக்களால் பார்க்கப்பட்டு, ஆச்சரிய சாதனை படைத்து வருகிறது.
 
ரசிகர்கள் இப்படி கொண்டாட, தலயின் மனநிலையோ வேறு மாதிரி இருக்கிறதாம். சமீப காலமாக, ‘படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்டில் இல்லாத மாதிரி கதையாக சொல்லுங்கள்’ என்று சொல்லித்தான் கதையே கேட்கிறாராம் தல. வெளி மாநிலம், இல்லையென்றால் வெளிநாடு என்பதுதான் அவருடைய சாய்ஸ்.
 
படப்பிடிப்பு வெளியில் நடக்கட்டும் சரி. தான் சம்பந்தப்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைக் கூட வெளியிலேயே வைத்துக் கொள்ள சொல்கிறாராம். விஷயம் இதுதான்… படத்தின் டப்பிங் வேலைகள் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. எல்லோரும் டப்பிங் பேசி முடித்துவிட்ட நிலையில், ‘இங்கு வேண்டாம். நான் மட்டும் ஹைதராபாத்தில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம் தல. தமிழ்நாட்டின் மீது அவருக்கு இந்த பாராமுகம் ஏனோ?
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்