Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ரெட்ரோ’ இசை விழாவில் ஜோதிகா வராதது ஏன்? மாமனார் - மருமகள் சண்டையா?

Advertiesment
சூர்யா

Mahendran

, திங்கள், 21 ஏப்ரல் 2025 (12:17 IST)
சமீபத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், இந்த விழாவில் ஜோதிகா கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சிவகுமார் இந்த விழாவில் கலந்து கொண்டதால் தான் ஜோதிகா வரவில்லை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பத்திலிருந்து ஜோதிகாவை, சிவகுமாருக்கு பிடிக்காது என்றும், சூர்யா–ஜோதிகா திருமணத்தை கூட அவர் முழு மனதுடன் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்று உறுதிமொழி வாங்கிவிட்டு தான் ஜோதிகாவை தனது மருமகளாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் திரை உலகிற்கு ஜோதிகா வந்த போது, சிவகுமாருக்கு அந்த முடிவு பிடிக்கவில்லை. அது மட்டும் இன்றி, சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே தனது வீட்டிற்கு அருகில் ஒரு பெரிய வீடு கட்டி ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று சிவகுமார் விரும்பினார். ஆனால், சூர்யாவை அழைத்துக் கொண்டு ஜோதிகா மும்பை சென்று விட்டது, சிவக்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான், மாமனார்–மருமகள் சண்டை காரணமாக தான் சிவகுமார் ரெட்ரோ விழாவுக்கு வந்ததால் ஜோதிகா வரவில்லை என்று ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கினால் மட்டுமே தெரியும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!