சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் ஓவராக பில்ட் அப் செய்யப்பட்டதால், அந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், 'ரெட்ரோ' படத்தையும் ஓவராக பில்ட் அப் செய்ய வேண்டாம் என்றும், அடக்கி வாசிப்போம் என்றும் சூர்யா தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூட, 'ரெட்ரோ' படத்தை பற்றி பில்ட்அப் செய்யும் வகையில் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் எதுவும் பேசவில்லை என்பதும், அடக்கியே வாசித்தார்கள் என்பதும், நேற்றைய விழாவை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
கங்குவா திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும், 2000 கோடி வசூல் செய்யும், உலகத்திலேயே இதுதான் சிறந்த படம் என்பதுபோல் பில்ட்அப் செய்ததால் தான் அந்த படம் சுமாராக இருந்தும் படுதோல்வியை சந்தித்தது. எனவே, இவ்வாறு ஓவர் பில்ட் அப்புகளை இனிமேல் செய்ய வேண்டாம் என்று சூர்யா முடிவு செய்து விட்டதாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒரு படத்தைப் பற்றி, படம் எடுத்தவர்களே பேசக்கூடாது, படம் பார்ப்பவர்களே பேச வேண்டும் என்று பலமுறை திரை விமர்சனங்கள் கூறியிருந்தாலும், நடிகர்கள் திருந்தாமல் மீண்டும் மீண்டும் பில்ட்அப் செய்து கொண்டு வருகின்றனர். ஆனால், சூர்யா தான் அடைந்த தோல்வியிலிருந்து பாடம் பெற்றிருக்கிறார் என்பது தெரிகிறது.