இருக்கு… ஆனா இல்ல… சுத்தவிடும் சித்திர நடிகை
, ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (10:38 IST)
‘காதல் இருக்கு… ஆனா, இல்ல…’ என கேட்பவர்களைத் தலைசுத்த வைக்கிறாராம் சித்திர நடிகை.
டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர் சித்திர நடிகை. நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரை அவர் காதலிப்பதாகச் சொன்னதும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகளும்தான் அவருக்கு ஏகப்பட்ட புகழைப் பெற்றுத் தந்தன.
எனவே, அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து படம் பண்ணால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைத்து ஒரு கும்பல் சுற்றுகிறது. நடிகர் ஓகே சொல்ல, நடிகையோ முடியாது என்கிறாராம். ‘நான் அவரை லவ் பண்றது உண்மைதான். ஆனால், ஜோடியாவெல்லாம் நடிக்க முடியாது’ என்கிறாராம். ‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி தானே லவ் இல்லேன்னு சொன்னுச்சு இந்தப் பொண்ணு? இப்போ மறுபடியும் லவ் பண்ணுதே…’ என்று குழம்புகிறார்களாம் சம்பந்தப்பட்டவர்கள்.
அடுத்த கட்டுரையில்