மனைவியின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்
மனைவியின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்
Publish Date: Mon, 15 Aug 2016 (19:13 IST)
Updated Date: Mon, 15 Aug 2016 (19:17 IST)
லதா ரஜினிகாந்த் தற்போது 'அபயம் கேர் பார் சில்ட்ரன்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் இதுவரை காணாமல் போன 8 மாத குழந்தை ரோகேஷ், 10 மாத குழந்தை சரண்யா, 3 வயது குழந்தை அஷ்வத் அகமத் ஆகியோரை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நாளை காலை 11 மணிக்கு காமராஜர் அரங்கில் நடத்துகிறார். இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார். ரஜினியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர், ஏற்கெனவே 'சிட்டிசன் பிளாட்பார்ம்' என்ற அமைப்பை தொடங்கி தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்காக பல பணிகளை செய்தவர். மேலும், அவர், தயா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Dinesh
Publish Date: Mon, 15 Aug 2016 (19:13 IST)
Updated Date: Mon, 15 Aug 2016 (19:17 IST)