Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் முதல்முறையாக HyperOS உடன் களமிறங்கும் Xiaomi! – இனி வரும் ஸ்மார்ட்போன்கள் வேற லெவல்ல இருக்கும்!

HyperOs

Prasanth Karthick

, திங்கள், 8 ஜனவரி 2024 (09:49 IST)
பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி முதல்முறையாக இந்தியாவில் புதிய HyperOS-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.



இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் கோலோச்சும் நிறுவனங்களில் சீனாவை சேர்ந்த ஷாவ்மி நிறுவனமும் ஒன்று. ரெட்மி, போக்கோ உள்ளிட்ட பெயர்களில் பல ஸ்மார்ட்போன்களை ஷாவ்மி வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI (MI User Interface) முறையில் இயங்கி வருகின்றன.

அடிக்கடி MIUI –ஐ அப்டேட் செய்து வரும் நிலையில் தற்போது MIUI 14 ஷாவ்மி மாடல் ஸ்மார்ட்போன்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அதைவிட மிகவும் இலகுவாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ள HyperOS என்ற புதிய இயங்குதளத்தை தனது ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்துகிறது ஷாவ்மி.

இந்த HyperOS-ம் ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் இயங்குதளம் என்றாலும், MIUI –ஐ விட பயன்பாட்டிற்கு எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜனவரி 11ம் தேதி ஷாவ்மி இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள POCO X6 Series மற்றும் POCO M6 PRO 5G மாடல்களில் இந்த HyperOS பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏரியில் மாயமான மத்திய அமைச்சர்..? நிகழ்ச்சிகள் ரத்து! – ஒடிசாவில் ஏற்பட்ட பரபரப்பு!