Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒன்ப்ளஸ் 11, சாம்சங் எஸ்23-க்கு போட்டியாக ஷாவ்மி 13 ப்ரோ..! – சிறப்பம்சங்கள் என்ன?

Xiaomi 13 Pro
, திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:43 IST)
சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் மற்றும் சாம்சங் மாடல்களுக்கு இணையான சிறப்பம்சங்களுடன் ஷாவ்மி புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதிய சிறப்பம்சங்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஸ்னாப்ட்ராகன் 8 Gen 2 ப்ராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பரவலாக கவனம் பெற்றும் வருகின்றன. முன்னதாக ஒன்ப்ளஸ் 11 மற்றும் சாம்சங்க் கேலக்ஸி எஸ்23 மாடல்கள் இந்த ப்ராசஸருடன் வெளியாகின.

அதை தொடர்ந்து தற்போது Xiaomi 13 Pro அதே ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 –உடன் வெளியாக உள்ளது.

Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

  • குவால்காம் SM8550 ஸ்னாப்ட்ராகன் 8 Gen 2 ப்ராசஸர்
  • LTPO ஓலெட் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் சிபியூ, அட்ரினோ 740 ஜிபியூ
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14,
  • 8 ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி இண்டர்னெல் மெமரி (மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது)
  • 32 எம்.பி முன்பக்க கேமரா
  • 50 எம்.பி மெயின் வைட் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 50 எம்பி டெலிபோட்டோ கேமரா
  • 5ஜி, 2 சிம் கார்டு ஸ்லாட், ஃபிங்கர் சென்சார்,
  • 4820 mAh Battery, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்,
  • யூஎஸ்பி டைப் – சி, வயர்லெஸ் சார்ஜிங்

இந்த Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனில் FM Radio, SD Card Slot, ஆடியோ ஜாக் ஆகிய வசதிகள் கிடையாது.

Xiaomi 13 Pro ப்ளாக், ப்ளூ, வொயிட் மற்றும் மிண்ட் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.60,000 முதல் ரூ.70,000 க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்களுக்கு கூட்டம் கூடும்; ஓட்டு விழாது: கமல் பிரச்சாரம் பற்றி செல்லூர் ராஜூ கருத்து