இன்று நோக்கியா அறிமுகப்படுத்தியுள்ள நோக்கியா எக்ஸ் 30 ஸ்மார்ட்போன், அதே வசதிகளை கொண்ட ரியல்மி 10 ப்ரோ இரண்டின் சாதக, பாதகங்கள் என்ன..?
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா தனது எக்ஸ் 30 5ஜி ஸ்மார்ட்போனை இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களோடு உள்ள இந்த ஸ்மார்ட்போன் மீது பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் விலையும் மலைக்க வைக்கக்கூடியதாக உள்ளது.
அதேசமயம் ரியல்மி முன்னதாக வெளியிட்ட ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஏறத்தாழ இதே சிறப்பம்சங்களுடன் இதை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. இரண்டு மொபைல்களுக்குமான ஒற்றுமை என்ன என்பதை பார்ப்போம்.
ரியல்மி 10 ப்ரோ மற்றும் நோக்கியா எக்ஸ்30 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 5ஜி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இரண்டிலும் ஸ்னாப்ட்ராகன் 695 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டுமே 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது.
நோக்கியா எக்ஸ் 30 மாடலானது 50 எம்.பி ஓஐஎஸ் கேமராவை கொண்டிருக்கிறது. இதுவே ரியல்மியில் 108 எம்.பி ப்ரைமரி கேமரா உள்ளது. மேலும் ரியல்மி 5000 mAh பேட்டரியையும், நோக்கியா எக்ஸ் 30 மாடலானது 4200 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட ரியல்மி 10 ப்ரோ ரூ.18,999க்கு விற்பனையாகிறது. நோக்கியா எக்ஸ்30 மாடலானது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி வசதிகளுடன் ரூ.48,999க்கு விற்பனையாகிறது.