Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசத்தப்போகும் ஐபேட் மினி 5...ஆச்சர்யமூட்டும் தகவல்...

அசத்தப்போகும் ஐபேட் மினி  5...ஆச்சர்யமூட்டும் தகவல்...
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (15:17 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் எந்த ஒரு பொருளுமே சந்தையில் சக்கை போடு போட்டு விற்பனையாகும், வாடிக்கையாளர் மத்தியிலும் நல்ல மதிப்பை பெரும். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் 5 டேப்லெட்  சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் தன் புதிய ஐபேட் மாடல்களை 2019 ஆண்டின் அரையாண்டு காலத்தில்தான் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.  புதிய ஐபேட்களில்  ஒன்று மினி 5 என அழைக்கப்படும் என்று  தெரிகிறது.
 
இதன்  மினி  5 மாடல் 6.1எம்.எம். அளவு கொண்ட தடிமனாகவும், 7.9 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் லைட்டிங் கனெக்டர், டச் ஐடி மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது. 
 
மேலும் புதிய ஐபேடில்  மைக்ரோபோன் மேல்பாகத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. இம்மாடலில் ஏ 10 ஃபியூசன் சிப் வழங்கப்படுமா,இல்லை ஏ 10 எக்ஸ் ஃபியூசன் வழங்கப்படுமா  என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதில் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
 
ஏற்கனவே வெளியான விவரங்களின் படி 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் அடுத்த கட்டம் தான் இந்த மாடல் ஐபேட் என்று கூறப்படுகிறது.
 
மேலும் இப்புது ஐபேட் வெளியாவது குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ஆயினும் இவ்வருடத்தில் புதியமாடல்  ஐபேட் மினி குறைந்த விலையில் அறிமுகமாகலாம் என வாடிக்கையாளர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசானில் ஒப்போவின் அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் !