Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எது சரியான பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்? Motorola G54 vs Realme Narzo 60x!

Motorola G54 vs Realme Narzo 60x
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:59 IST)
இந்தியாவில் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் ஒரே சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள Motorola G54 மற்றும் Realme Narzo 60x இடையே போட்டி நிலவுகிறது.



இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் பல வாரம்தோறும் அறிமுகமாகி வருகின்றன. இவற்றில் பட்ஜெட் விலையில் நல்ல சிறப்பம்சங்களுடன் உள்ள ஸ்மார்ட்போன்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதால் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டி போட்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் வெளியாகியுள்ள Motorola G54 மற்றும் Realme Narzo 60x ஆகிய மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே சிறப்பம்சங்களுடன்  குறைந்த விலையில் வெளியாகியுள்ளன.

Motorola G54 5G மாடலில் 6.5 ஃபுல் ஹெச்.டி+ டிஸ்ப்ளே உள்ளது. இது Realme Narzo 60x மாடலில் கூடுதலாக 6.72 இன்ச் FHD டிஸ்ப்ளேவாக உள்ளது. Motorola G54 5G-ல் டைமென்சிட்டி 7020 சிப்செட்  உள்ளது. Realme Narzo 60x-ல் டைமென்சிட்டியின் 6100+ சிப்செட் உள்ளது.

OS பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளமாக உள்ளது. Motorola G54 மாடலில் 50 எம்பி + 8 எம்பி ப்ரைமரி கேமரா, 16 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. கிட்டத்தட்ட இதே தரத்திலான கேமரா Realme Narzo 60x-ல் உள்ளது. இதில் 50 எம்பி + 2 எம்பி ப்ரைமரி கேமராவும், 8 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. செல்பி கேமராவை பொறுத்தவரை ரியல்மி மாடலில் சற்று தரம் கூடுதலாக உள்ளது.

webdunia


RAM வசதிகளில் Motorola G54 5G மாடலில் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம்கள் உள்ளன. ஆனால் Realme Narzo 60x-ல் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்கள் மட்டுமே உள்ளன. இண்டெர்னல் மெமரியில் Motorola G54 5G மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்டுகள் உள்ளது. Realme Narzo 60x-ல் 128 ஜிபி மெமரி மட்டுமே உள்ளது.

பேட்டரி கெபாசிட்டியில் Motorola G54 மாடலில் 6000 mAh பேட்டரி, 33W சார்ஜிங் உள்ளது. Realme Narzo 60x-ல் 5000 mAh பேட்டரியும், 33 W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இந்த Motorola G54 5G மாடலின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.15,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 ஆகவும் உள்ளது.

Realme Narzo 60x மாடலில் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.12,999 ஆகவும், 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.14,999 ஆகவும் உள்ளது.

webdunia


ஒப்பீட்டளவில் இரண்டு மாடல்களுமே ஒரே அளவிலான சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. ரேம் மற்றும் இண்டெர்னல் மெமரி ரீதியில் Motorola G54 5G விலை சற்று கூடுதலாகவும், Realme Narzo 60x சற்று விலை குறைவாகவும் உள்ளது. இரண்டு மாடல்களிலும் மீடியமான கேமராக்களே உள்ளது. ஆனால் எல்லா விதமான பயன்பாடுகளுக்கும் சிறப்பான பட்ஜெட் விலையிலான 5ஜி ஸ்மார்ட்போன் வேண்டுவோருக்கு இந்த இரண்டு மாடல்களுமே நல்ல சாய்ஸாக இருக்கும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதன தர்மம் குறித்து கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்லியுள்ளார்?