Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்மார்ட் டிவி ஒரு கோடி ரூபாயா? அப்படி என்னதான் இருக்கு? – வியக்க வைத்த Samsung 4K Micro LED TV!

samsung 110 inch 4k micro led tv
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (16:00 IST)
தொழில்நுட்ப சந்தையில் ஸ்மார்ட்போன், டிவி என பல எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகப்படுத்தி வரும் சாம்சங் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ரூ.1.15 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் டிவி பலரையும் வியக்க வைத்துள்ளது.



சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல மாடல் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி விற்பனையில் சாம்சங், சோனி, ஷாவ்மி, VU என பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

இந்நிலையில் பல நவீன சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய 110 இன்ச் நீளம் கொண்ட Samsung 4K Micro LED TV –யை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற ஸ்மார்ட் டிவிக்களை விட இதில் பல சிறப்பம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவி 110 இன்ச் (சுமார் 2 மீட்டர்) 4K மைக்ரோ LED திரையை கொண்டுள்ளது. இது Micro AI ப்ராசஸர் மூலமாக இயங்குகிறது. இதில் Tizen Operating system உள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக 100 W திறன் கொண்ட 6.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் ஒலித்தரம் ஒரு மினி தியேட்டருக்கு இணையானதாக இருக்கும். மேலும் இது Dolby Digital Plus + OTS Pro தொழில்நுட்பத்துடன் வருகிறது.

வைஃபை 6, ப்ளூடூத் 5.2, 3டி சரவுண்ட் சவுண்ட், 6 HDMI போர்ட், 2 USB போர்ட், கூகிள் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,14,99,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்டிவி சந்தையில் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவிக்களில் இதுவும் ஒன்று.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

NLC வேண்டாம் என போராடியவர்கள் சாராய ஆலை வேண்டாம் என போராடியதுண்டா? பாஜக