Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதே விலை.. அதே சிறப்பம்சங்கள்! CMF Phone 1க்கு போட்டியாக இறங்கிய Motorola G85 5G!

Advertiesment
Motorola G85

Prasanth Karthick

, திங்கள், 15 ஜூலை 2024 (11:44 IST)

சமீபத்தில் நத்திங் நிறுவனம் வெளியிட்ட  CMF Phone 1 க்கு இணையான சிறப்பம்சங்களுடன் களம் இறங்கியுள்ள Motorola G85 5G.

இந்தியாவில் நெருங்கி வரும் பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு பல புதிய வகை ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்களும் போட்டிப் போட்டு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது Motorola G85 5G இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த சிறப்பம்சங்கள் நத்திங் நிறுவனத்தின் CMF Phone 1க்கு இணையாக உள்ளன.

Motorola G85 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.67 இன்ச் pOLED டிஸ்ப்ளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 6எஸ் ஜென்3 சிப்செட்

2.3 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்

8 ஜிபி / 12 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம் சப்போர்ட்

128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி

மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை

50 எம்பி + 8 எம்பி டூவல் ப்ரைமரி கேமரா

32 எம்பி Sony LYT600 முன்பக்க செல்பி கேமரா

5000 mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த Motorola G85 5G ஸ்மார்ட்போனின் பின்பக்க கேஸ் வீகன் லெதரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோபால்ட் ப்ளூ, ஆலிவ் க்ரீன், அர்பன் க்ரே ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடலின் விலை வங்கி சலுகைகள் உட்பட ரூ.16,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999 ஆகவும் விற்பனைக்கு வந்துள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசைவம் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரம்! எங்கே இருக்கிறது தெரியுமா?