Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

OnePlus 11 மற்றும் 11R 5G முன்பதிவு தொடக்கம்! அட்டகாசமான சிறப்பம்சங்கள்! - முழு விவரம் இதோ!

Oneplus
, புதன், 8 பிப்ரவரி 2023 (13:06 IST)
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடுகளான OnePlus 11 மற்றும் 11R மாடல் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் என பல ஸ்மார்ட் தயாரிப்புகளை வழங்கி முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்ப்ளஸ். இந்த நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்ப்ளஸ் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களான OnePlus 11 மற்றும் OnePlus 11R ஆகியவற்றை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

webdunia

 
OnePlus 11 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

 
  • ஆக்டாகோர் (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510)
  • குவால்காம் ஸ்னாப் ட்ராகன் 8 ஜென் 2
  • 6.7 இன்ச் டிஸ்ப்ளே (17.02 செ.மீ), அட்ரினோ 740 கிராபிக்ஸ்
  • 3216 x 1440 பிக்சல்ஸ், அமோலெட் டிஸ்ப்ளே
  • ஆக்ஸிஜன் ஓஎஸ், ஆண்ட்ராய்டு வெர்சன் 13
  • 8 GB RAM/16GB RAM, 128GB/256GB இண்டெர்னல் மெமரி
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 50 எம்.பி வைட் ஆங்கிள் கேமரா, 48 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 32 எம்.பிடெலிபோட்டோ கேமரா
  • யூஎஸ்பி டைப் சி, ப்ளூடூத், வைஃபை, டால்பி அட்மோஸ் ஒலித்தரம்,
  • 5000 mAh பேட்டரி, சூப்பர் VOOC 100W குயிக் சார்ஜிங் (25 நிமிடத்தில் 100% சார்ஜ்)
  • எடர்னல் க்ரீன், டைட்டன் ப்ளாக் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
 
OnePlus 11 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டது ரூ.54,999க்கும், 16ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டது ரூ.61,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 7 முதல் தொடங்கியுள்ளது.


webdunia


OnePlus 11R 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
 
  • ஆக்டாகோர் (1x3.19 GHz Cortex-X2 & 3x2.75 GHz Cortex-A710 & 4x1.80 GHz Cortex-A510)
  • குவால்காம் ஸ்னாப் ட்ராகன் 8 ப்ளஸ் ஜென் 1
  • 6.7 இன்ச் டிஸ்ப்ளே (17.02 செ.மீ), அட்ரினோ 740 கிராபிக்ஸ்
  • 3216 x 1440 பிக்சல்ஸ், அமோலெட் டிஸ்ப்ளே
  • ஆக்ஸிஜன் ஓஎஸ், ஆண்ட்ராய்டு வெர்சன் 13
  • 8 GB RAM/16GB RAM, 128GB/256GB இண்டெர்னல் மெமரி
  • 16 எம்.பி முன்பக்க கேமரா
  • 50 எம்.பி வைட் ஆங்கிள் கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2 எம்.பி டெலிபோட்டோ கேமரா
  • யூஎஸ்பி 2.0, டைப் சி, ப்ளூடூத், வைஃபை, டால்பி அட்மோஸ் ஒலித்தரம்,
  • 5000 mAh பேட்டரி, சூப்பர் VOOC 100W குயிக் சார்ஜிங் (25 நிமிடத்தில் 100% சார்ஜ்)
  • கேலக்டிக் சில்வர், சோனிக் ப்ளாக் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
 
OnePlus 11R 5G ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்டது ரூ.39,999க்கும், 16ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டது ரூ.44,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது.

OnePlus 11 5ஜி விற்பனை பிப்ரவரி 14ம் தேதியும், OnePlus 11R 5G பிப்ரவரி 28ம் தேதியும் விற்பனையை தொடங்குகிறது. மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் OnePlus Buds Pro 2R, OnePlus TV Q2 Pro 65, OnePlus Pad ஆகியவற்றின் அறிமுகம் இன்று நடைபெறுகிறது. இவற்றின் விற்பனையும் விரைவில் தொடங்க உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை: டெல்லி ஐகோர்ட் கண்டனம்..!