ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மீது ரூ.7,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இதன் மீதான விலையை ரூ.7,000 வரை குறைத்துள்ளது.
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. விலை குறைப்பிற்கு பின் 4 ஜிபி ராம் ரூ.19,999 விலையிலும், 6 ஜிபி ராம் ரூ.22,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:
# 6.0 இன்ச் 2246x1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் ப்யூர் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். சிப்செட்
# அட்ரினோ 616 GPU, ஆன்ட்ராய்டு 9.0 பை
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி / 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
# 13 எம்பி இரண்டாவது பிரைமரி, ZEISS ஆப்டிக்ஸ்
# 20 எம்பி செல்ஃபி கேமரா
# 3500 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்