Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Selfie Camera தேவையில்ல.. வேற லெவல் Optionஉடன் களமிறங்கிய Lava Blaze Duo 5G! - விலை இவ்வளவுதானா?

Lava Blaze Duo

Prasanth Karthick

, திங்கள், 16 டிசம்பர் 2024 (13:09 IST)

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Lava Mobiles பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் தனது புதிய Lava Blaze Duo 5G மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

இந்தியாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான லாவா நிறுவனம் தொடர்ந்து குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பொதுவாக ஸ்மார்ட்போன்களில் முன்பக்க செல்பி கேமராவின் தரம், பின்பக்க ப்ரைமரி கேமராக்களை விட குறைவாகவே இருக்கும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கும் விதமாக இந்த Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போனில் பின்பக்க கேமரா அருகே 1.58 இன்ச் அளவிலான டச் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இதனால் பின்பக்க கேமராவில் படம் எடுக்கும்போதே அதன் Previewவை அந்த சின்ன திரையில் காண முடியும். அதுமட்டுமல்லாமல் அந்த 1.58 இன்ச் சின்ன டச் ஸ்க்ரீன் மூலமாகவே அழைப்புகளை அட்டெண்ட் செய்ய முடியும், பாடல்களை ப்ளே, பாஸ் செய்வதுடன் மாற்றவும் முடியும்.

 

Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 
  • 6.67 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்ப்ளே
  • 2.5 GHz மீடியாடெக் டைமென்சிட்டி 7025 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14
  • 6 GB ரேம் / 8 ஜிபி ரேம் + 6 ஜிபி / 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 64 MP சோனி கேமரா + 2 MP கேமரா + LED Flash
  • ப்ளூடூத் 5.2, வைஃபை, 5ஜி, 4ஜி
  • 16 MP முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்
 

இந்த Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போன் செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஆர்க்டிக் வொயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக ரூ.14,999க்கு அறிமுகமாகும் இந்த Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் மீது மோதிய அரசு பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்!