இளைய தலைமுறையினரின் உலகளாவிய முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது பேஸ்புக் ஆகும். இதன் வாடிகையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க உள்ளிட்ட 20 நாடுகளில் ’டேட்டிங் ’என்ற புதுசேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த டேட்டிங் சேவையை ஏற்கனவே பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதில் பயன்படுத்தலாம் எனவும், ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கின் மூலமாக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டேட்டிங் சேவையில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது. முக்கியமாக மெசெஞ்சர் மூலம் தகவல்களை அளிக்கலாம். ஃபாலோயர்களையும் இதில் இணைக்கலாம். மேலும் இதில், ஸ்டோரி என்ற வகையில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதிகள் இருப்பது கூடுதம் அம்சமாக உள்ளது.
இந்த டேட்டிங் சேவை நம் இந்தியாவுக்கு 2020 ல் வரும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது