கூகுள் நிறுவனம் சிறப்பு அம்சங்களுடனான வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்யவுள்ளது.
உலக பிரபலமான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், தற்போது ”கூகுள் பிக்ஸல் பட்ஸ்” என்ற வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
வழக்கமாக சிலரின் காதுகளில் இயர்ஃபோன் சரியாக அமராது. அதன் அமைப்பு சிலரின் காதுகளுக்கு பொருந்தாது. ஆனால் கூகுள் பிக்ஸலின் வயர்லெஸ் இயர்பட்ஸ், காதுகளில் ஃபிட்டாக அமர்வது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஹைப்ரிட் வடிவம் காதுகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸில் இரு மைக்ரோஃபோன்கள் உள்ளதால், வெளியில் ஒளிக்க கூடிய தேவையில்லாத இரைச்சல்களை முடக்கி, இசை அனுபவத்தை மேலும் கூட்டும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள “வாய்ஸ் அக்சலரோமீட்டர்” காற்று அடிக்கும் இடங்களிலும் தொலைபேசியில் பேசுவது துள்ளியமாக கேட்கவைக்கும். இதன் ப்ளூ டூத் கனெக்டிவிட்டி, மூன்று அறைகள் தள்ளி மொபைல் இருந்தாலும், கனெக்ட் செய்யக்கூடிய ‘Long range Bluetooth” தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
இதில், Volume-ஐ அதிகப்படுத்துதல் மற்றும் குறைத்தல், ஒரு பாடலை Play செய்தல், Pause செய்தல், swipe செய்தல் ஆகிய பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 5 மணி நேரம் சார்ஜ் முழுவதும் இறங்காமல் தாங்ககூடிய பேட்டரி தொழில்நுட்பம் உள்ளது. இதில் வாட்டர் ரெஸிஸ்டண்ட்டும் உள்ளது கூடுதல் தகவல்.
இது போன்ற சிறப்பு அம்சங்கள் கொண்ட கூகுள் பிக்ஸல் வயர்லெஸ் இயர்பட்ஸ் அடுத்த 2020 வருடம், அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு12,790 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் கருப்பு, வெள்ளை, ஆரங்ச் ஆகிய நிறங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.