Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI ல நீ ஆட்டம் காட்டுனா.. Game ல நான் காட்டுவேன்! – Xboxக்கு ஆப்பு வைக்கும் Google Play Games?

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (12:18 IST)
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் விளையாடும் கேம்களை கணினியிலும் விளையாடும் வகையில் கூகிள் நிறுவனம் Google Play Games PC Version ஐ வெளியிட்டுள்ளது.



உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்களை கவரும் விதமாக Google Play store ல் ஏராளமான கேம்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கேம்களை ஸ்மார்ட்போனில் விளையாட முடிந்தாலும் PCல் விளையாட முடியாத நிலை இருந்து வந்தது. ஏனென்றால் PC ல் மைக்ரோசாப்ட் இயங்குதளமே உள்ளதால் அது ஆண்ட்ராய்டு கேம்களை சப்போர்ட் செய்யாது. இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் PC-ல் கேம்கள் விளையாடும் விதமாக Xbox அப்ளிகேசனை அறிமுகப்படுத்தியது.

PC Gamers பலரும் Xbox பயன்படுத்தி வந்த நிலையில் சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது Google Play Games அப்ளிகேசன் PCல் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. பீட்டா வெர்சனாக சில மாதங்கள் முன்னதாக வெளியான Google Play Games தற்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டில் விளையாடும் பல கேம்களும் Google Play Games store ல் கிடைக்கின்றன. எனினும் Free Fire, Call of Duty, Battleground போன்ற கேம்கள் இன்னும் Google Play Games ல் இடம்பெறவில்லை. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு விளையாட்டுகளும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தேடுபொறியில் கூகிளின் ஆதிக்கத்தை அடக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை வெளியிட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்டின் Xbox க்கு போட்டியாக கூகிள் தனது Google Play Games ஐ கணினியில் இறக்கியுள்ளது. இதனால் Xbox க்கு பாதிப்பு ஏற்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments