Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோ ரீசார்ஜ் செய்தால் நெட்ப்ளிக்ஸ் இலவசம்! – அசத்தல் ஆஃபர்!

Advertiesment
netflix
, திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (15:49 IST)
இந்திய தொலைதொடர்பில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் பேக்குகளில் நெட்ப்ளிக்ஸை இலவசமாக வழங்குகிறது.



இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஜியோ நிறுவனம் ஒன்று. அவ்வபோது வாடிக்கையாளர்களை என்கேஜ் செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் பல்வேறு ஸ்பெஷல் பேக்குகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சேவையை வழங்குகிறது.

அதன்படி ரூ.1099 மற்றும் ரூ.1,499 ஆகிய இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. ரூ.1099 ரீசார்ஜ் பேக்கில் தினமும் 2ஜிபி டேட்டா (மொத்தம் 168 ஜிபி டேட்டா), 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்கள் 84 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இதனுடன் வேலிடிட்டி காலத்திற்குள் ஜியோ சினிமா, நெட்ப்ளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.1499 ரீசார்ஜ் பேக்கில் தினமும் 3ஜிபி டேட்டா (மொத்தம் 292 ஜிபி டேட்டா), 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் கால்கள் 84 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இதனுடன் வேலிடிட்டி காலத்திற்குள் ஜியோ சினிமா, நெட்ப்ளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு: இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி