கூகுள் பே, ஃபோன் பே, உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை வழங்கும் ஆப்கள் சில நாட்கள் இயங்காது என இதிய தேசியக் கட்டணக் கழகம் தெரிவித்துள்ளதால் நாட்டில் இந்த ஆப்களின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கிகளில் கால் கடுக்க நின்று ஒரு நாள் முழுக்க நேரத்தைச் செலவிட்டு பணத்தைப்பெறவோ எடுக்கவோ மக்கள் சிரமப்பட்ட காலம் போய், தற்போதைய இருபத்தியோராம் நூற்றாண்டில் மக்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.
அந்தவகையில் பணப்பரிமாற்றம் நிகழ்த்த உதவும் செல்போன் ஆப்களான கூகுள் பே, , ஃபோன் பே ஆகியவை சில நாட்களுக்கு இயங்காது என இந்திய தேசியக் கட்டணக் கழகம் தெரிவித்துள்ளது.
அதாவது யூனிஃபைட் பேமண்ட் இண்டர்ஸ்பேஸ் –ஐபயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அடுத்த சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஆப்கள் சரியாக இயங்காது என இந்திய தேசியக் கட்டணக் கழகம்( NPCi) தெரிவித்துள்ளது.#Googlepay, #PhonePe