Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டவுன் ஆனாலும் டாப் 3-ல் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்: எப்படி தெரியுமா?

டவுன் ஆனாலும் டாப் 3-ல் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்: எப்படி தெரியுமா?
, வியாழன், 4 ஜூலை 2019 (08:32 IST)
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கி போனதால் டிவிட்டர் டிரெண்டிங்கில் டாப் 3 இடத்தை பிடித்துள்ளது. 
 
உலகில் பலதரப்பட்டோரால் பயன்படுத்தபடும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல மணி நேரமாக முடங்கியதால் அதன் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர். 
 
சமுக வலைத்தளங்கள் முடங்கியதால் வாய்ஸ் மெசேஜ்களை டவுன்லோடு மற்றும் அப்லோட் செய்ய முடியவில்லை, புகைப்படங்கள், வீடியோக்கள் எவையுமே அப்லோட் டவுன்லோட் ஆகவில்லை என புகார் எழுந்தது. 
webdunia
இதனிடையே பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் டவுன் ஆகிவிட்டதை குறிப்பிடும் வகையில் உலகம் முழுவதும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆம், டிவிட்டர் டிரெண்டிங்கில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் டவுன் என்ற ஹேஷ்டேக்குகள் டாப் 3 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதகாக கூறப்படும் நிலையில், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்குவது இது முதல் முறையல்ல இது போல் ஏற்கனவே நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் திடீர் பாதிப்பு