Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போட்டோஷாப் பண்ணலை உண்மை போட்டோதான் – வைரலான ஹன்சிகாவின் புகைப்படம்

Advertiesment
Cinema News
, செவ்வாய், 25 ஜூன் 2019 (18:52 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. ”எங்கேயும் காதல்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். அது ஹிட் ஆனது. அதை தொடர்ந்து தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தார். நடிகர்கள் இவரை சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார்.

ஆனால் சமீபகாலமாக அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் ஹன்சிகா அழகை மெறுகேற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி கூறிய ஹன்சிகா என்னை பற்றி பொய்யான தகவல்கள் வெளிவருகின்றன. அவை உண்மையில்லை என கூறியிருந்தார்.

ஆனாலும் அந்த செய்தி எல்லா பக்கமும் பரவி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோவை பதிவிட்ட ஹன்சிகா “இயற்கை அழகு – எந்த எடிட்டிங்கும் செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ஹன்சிகாவின் எடிட் செய்யப்படாத அந்த போட்டோவை ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Confidence level: uploading a picture with no filter

A post shared by Hansika M (@ihansika) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"குடும்ப குத்துவிளக்குகளின் கும்மாளம்" - மட்டமான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ !